📅 Saturday, 06 June 2026 IST | வைகாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 21, 2026 07:49 PM

Pereol Diesel Price: போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு

Pereol Diesel Price: போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு

Pereol Diesel Price: போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?

Pereol Diesel Price: ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல்,டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Pereol Diesel Price: பெட்ரோல் விலை லிட்டருக்கு 104 ரூபாயை கடந்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு

ஒரு வார கால இடைவெளியிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி அறிவித்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 79 காசுகள் உயர்ந்து 104 ரூபாய் 46 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், ஒரு லிட்டர் டீசல் விலை 86 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 11 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த நான்கு நாட்களில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் 4 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.11 ரூபாயும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் விலை உயர வாய்ப்பு:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதை தவிர்க்க, மீண்டும் எரிபொருட்களின் விலை உயர்த்தப்படும் என பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதனை நிரூபிக்கும் வகையில் நான்கு நாட்கள் இடைவெளியிலேயே மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை சுமார் 10 ரூபாய் வரையிலும் உயரும் எனவும், அது ஒரே அடியாக இல்லாமல் தினசரி அடிப்படையில் நிகழலாம் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதன்படி, அடுத்த சில நாட்களுக்கு எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கலக்கத்தில் பொதுமக்கள்:

ஏற்கனவே பண வீக்கம் மற்றும் விலை வாசி உயர்வு போன்ற பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்படுவதால், வாடகை வாகனங்களுக்கான கட்டணம் உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையற்ற தன்மையால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். அதேநேரம், தேர்தல் முடியும் வரை அமைதி காத்து, முடிவுகள் வெளியானதுமே விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:Seeman: CM விஜய்க்கு சவால் விட்டு புலம்பிய சீமான் “திணறிட்டேன், எப்படி கொடுக்குறீங்கனு நானும் பார்க்கிறேன்”

அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்:

கடந்த 15ம் தேதி விலையேற்றத்தின் போதே அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும் போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் லாபம் பார்த்த எண்ணெய் நிறுவனங்கள், இக்கட்டான நிலையில் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டாமா? என முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார். விலையேற்றத்தை ஏற்க முடியாது எனவும், அதனை திரும்பப்பெற வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.