📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 25, 2026 07:30 AM

Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை

Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை

Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு

Petrol Diesel Price: இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

Petrol Diesel Price: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் உயர்வு:

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை டீசலுக்கு 2 ரூபாய் 46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூப்பாய் 57 காசுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து சில்லறை விற்பனையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 107 ரூபாய் 77 காசுகளையும், டீசல் விலை லிட்டருக்கு 99 ரூபாய் 55 காசுகளாகவும் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வால் அத்தியாசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

4வது முறையாக விலை உயர்வு

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் தொடர்வதால் எண்ணெய் விநியோக சங்கிலியில் உள்ள பிரச்னை தீர்ந்ததாக இல்லை. இதனால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன் விளைவாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.11 ரூபாயும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 19ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகளும் உயர்த்தப்பட்டது. மூன்றாவது முறையாக கடந்த 23ம் தேதியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 87 காசுகளும் உயர்த்தப்பட்டன. அதன்படி, பெட்ரோல் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் லிட்டருக்கு 7 ரூபாய் 21 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 41 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து விலை உயர வாய்ப்பு

மேற்காசியாவில் தொடரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையான விலையேற்றத்தை கண்டுள்ளது. 5 மாநிலங்களுக்கான தேர்தல் சூழலில் எரிபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கலால் வரியை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த நடவடிக்கையால் அரசுக்கு மட்டுமின்றி எண்ணெய் நிறுவனங்களுக்கும் கடும் இழப்பு ஏற்படுவதாக கூறி தற்போது எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகின்றன. இதோடு நிற்காமல் அடுத்த சில தினங்களும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அறிவிப்புகள் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக 10 ரூபாய் வரையில் இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் கவலை:

ஏற்கனவே, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி வரவுள்ளதாக அரசியல் தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் எரிபொருட்களின் விலை உயர்வதால், உணவுப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.