📅 Saturday, 06 June 2026 IST | வைகாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 23, 2026 08:41 AM

Petrol Diesel Price Hike : அதிகாலையிலேயே ஷாக்.! மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை- ஒரு லிட்டருக்கு

Petrol Diesel Price Hike : அதிகாலையிலேயே ஷாக்.! மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை- ஒரு லிட்டருக்கு

Petrol Diesel Price Hike : அதிகாலையிலேயே ஷாக்.! மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை- ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

Petrol Diesel Price Hike : ஈரான் உள்ளிட்ட வளைகுடா பகுதியில் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காரணமாக விலையானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

10 நாட்களில் 3வது முறையாக விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலையானது கடந்த 10 நாட்களில் 3வது முறையாக அதிகரிக்கப்படுள்ளது. சுமார் 4 ஆண்டுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 அதிகரிக்கப்பட்டது. அடுத்தாக கடந்த மே 19 ஆம் தேதி பெட்ரோல் டீசலுக்கு 90 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு விலையானது உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

மீண்டும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு

குறிப்பாக ஆட்டோ, கார் ஆகியவற்றின் வாடகை அதிகரிக்கப்பட்டது. உணவு பொருட்களின் விலையும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஏற்கனவே 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வடை தற்போது 15 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக இன்று அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பெட்ரோல் விலை டீசல் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 87 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பதற்றமான நிலை நீடித்து வருகிறது. ஈரான் - அமெரிக்கா மாறி மாறி தாக்கி வந்த நிலையில் தற்போது போர் பதற்றம் இல்லாத நிலையில், ஈரான் பகுதியில் உள்ள ஹார்மூஸ் நீர் ஜலசந்தி பகுதியை அமெரிக்க முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய அளிவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.