📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 29, 2026 03:00 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..!

பெட்ரோல், டீசல் விலையை கடந்த 15-ந்தேதியில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. அன்றைய தினம் ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 அதிகரித்தது. அதன் பின்னரும் விலை அதிகரித்தபடியே இருக்கிறது.

அந்த வரிசையில் நேற்று முன் தினமும் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ.108.20-க்கு விற்பனையானது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து, ரூ.99.98-க்கு விற்பனையானது. கடந்த 14 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.36-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7.59-ம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து நேற்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் சற்று குறைந்தது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.107.77-க்கு விற்பனையானது. டீசல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.99.55-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.108.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ரூ.99.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.