📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 21, 2026 06:32 AM

பனையூர் தவெக அலுவலகத்தில் பவர் கட்

பனையூர் தவெக அலுவலகத்தில் பவர் கட்

சென்னையில் அமைச்சர்கள் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில், திடீரென இரண்டு முறை மின்வெட்டு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில், மாற்றுக்கட்சியினர் த.வெ.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின்போது, இரண்டு முறை மின்வெட்டு ஏற்பட்டது. அதன் பின், 'ஜெனரேட்டர்' பயன்படுத்தி, நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், அமைச்சர் ஆதவ் பேசியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து, 90 சதவீத நிர்வாகிகளும், தொண்டர்களும் த.வெ.க.வில் இணைகின்றனர். தற்போது, அ.தி.மு.க,வை விட, தி.மு.க.,தான் மன அழுத்தத்தில் உள்ளது. இப்போது இந்த நிகழ்ச்சியில், இரண்டு முறை மின்வெட்டு ஏற்பட்டது. இந்த சாலையில், டிரான்ஸ்பார்மர் பிரச்னை உள்ளது; மின் தேவை அதிகம் உள்ளது.

தமிழகத்தில், 30 ஆண்டுகளாக நிர்வாக தோல்வி இருந்தது. நாங்கள் வந்து, 30 நாட்கள்தான் ஆகி உள்ளது. மின்சார துறையில், 50 சதவீத பணியாளர்களே கிடையாது. மின்சார துறையில், டிரான்ஸ்பார்மர்கள், நிலக்கரி கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்துள்ளனர். அதன் விபரங்களை, துறை அமைச்சர் விரைவில் வெளியிடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

பனையூர் தவெக அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் பவர் கட் பிரச்னை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்