📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 25, 2026 10:02 AM

பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில், 1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க கோரி, 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2025 டிசம்பரில் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் நிலை-II தேர்வில் தேர்ச்சி பெற்று, 2026 ஜனவரியில் கலந்தாய்வை நிறைவு செய்த 1,429 தேர்வர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.

நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்வான 1,429 பேரும், தாங்கள் செய்து வந்த பணிகளை விட்டு விலகியதுடன், மேல்படிப்பு மற்றும் பிற வேலைவாய்ப்பு முயற்சிகளையும் கைவிட்டு உள்ளோம். எனவே, இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n