Tamil Nadu
July 17, 2026 10:35 PM
பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது
பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!
புகாரை முடித்து வைக்கவும், மொபைல் போன்களை திரும்ப ஒப்படைக்கவும் ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இதனிடையே அந்த வாகனத்தை ரவிக்குமார் தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதாக ருஜைனா பாத்திமாவின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் தன்னிடம் இருந்த மாற்று சாவியை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று, பொள்ளாச்சியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இது குறித்து ரவிக்குமார் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu