📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 10, 2026 03:30 PM

Power Cut DMK Protest : விஜய் அரசுக்கு செக்.! திமுக கையில் எடுத்த முக்கிய ஆயுதம்

Power Cut DMK Protest : விஜய் அரசுக்கு செக்.! திமுக கையில் எடுத்த முக்கிய ஆயுதம்

Power Cut DMK Protest : விஜய் அரசுக்கு செக்.! திமுக கையில் எடுத்த முக்கிய ஆயுதம்- ஸ்டாலினின் மெகா பிளான்

Power Cut DMK Protest : தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்று ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில், விஜய் அரசுக்கு செக் வைக்கும் வகையில் திமுக தலைமை தமிழகம் முழுவதும் போராட்டதை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.O ஆட்சி அமைக்கப்படும் என திமுக தலைமை உறுதியாக நம்பியது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக வீழ்த்தப்பட்டு நடிகர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு திட்டங்களை தவெக அரசு செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளான சிங்கப்பெண் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம் என அறிவிப்புகள் வெளியிட்டு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் தவெக அரசு பதவியேற்ற கடந்த 30 நாட்களில் அடுத்தடுத்து பல நெருக்கடிகள் உருவாகி வருகிறது.

சர்ச்சையில் சிக்கிய தவெக

குறிப்பாக கோவையில் சிறுமி கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,உரிய வகையில் கடன் தள்ளுபடி செய்யவில்லையெனவும் விவசாயிகள் போராட்டம், அதிமுகவை இரண்டாக உடைக்கப்பட்டு அதிமுக எம்எல்ஏக்களை இழுத்தது என தொடர் விமர்சனங்களால் தவெக தத்தளித்து வருகிறது. அடுத்தாக அரசு அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆய்வு செய்து ரீல்ஸ் வெளியிட்டது.

இந்த நிலையில் முக்கிய பிரச்சனையாக இருப்பது மின் வெட்டு, தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை தொடரும் மின்வெட்டால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். பல இடங்களில் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மின்வெட்டால் மக்கள் போராட்டம்

இது மட்டுமில்லாமல் முதலமைச்சர் விஜய் தொகுதியான பெரம்பூர் தொகுதியிலும், முதலமைச்சர் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியிலும் இரவு நேரத்தில் நீடிக்கும் மின் வெட்டால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதி அடைந்துள்ளனர். ஆனால் மின் வெட்டை தடுக்க தவெக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் மின் வெட்டு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்தது. தமிழகத்தில் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரம் அறிவிக்கப்பட்டு மின் வெட்டு செய்யப்பட்டது. இதனால் திமுக 2011ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைய மின் வெட்டும் ஒரு காரணமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், மின் வெட்டு என்ற ஆயுதத்தை திமுக கையில் எடுத்துள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் தவெக அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தவெக அரசு தொடர்பாக முதல் 6 மாதம் விமர்சிக்க மாட்டோம் என திமுக தலைமை கூறிய நிலையில், அடுத்தடுத்து ஏற்படும் மின் வெட்டு சர்ச்சை காரணமாக தவெக அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டமாக மின் வெட்டுக்கு எதிரான போராட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் போராட்டம்

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் தவெக அரசுக்கு எதிராக எந்த போராட்டங்களை நடத்தலாம், எந்த போராட்டதை நடத்தினால் மக்களின் ஆதரவு கிடைக்கும் என ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்தே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மின் வெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிட இருப்பதாக அண்ணா அறிவாலய வட்டார தகவலாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி