📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 30, 2026 08:31 AM

பராசக்தியை தரிசித்தால் நிம்மதியான வாழ்வு

பராசக்தியை தரிசித்தால் நிம்மதியான வாழ்வு

நிம்மதியாக வாழ தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி அம்மனை தரிசிப்போம்.கைலாயத்தில் சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தது. இதை பார்க்க தேவர்களும், முனிவர்களும் கூடியதால் வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது. பூமியை சமப்படுத்த அகத்திய முனிவரை தெற்கு நோக்கி அனுப்பினார் சிவன்.அப்போது, ‘குற்றாலத்தில் என்னை வழிபடு. உனக்கு திருமணக்கோலத்தில் தரிசனம் தருகிறேன்’ என வரம் அளித்தார். அதன்படி அகத்தியர் இங்கு சிவனை வழிபட்டார். குழல்வாய் மொழி நாயகி, பராசக்தி அம்மன் இங்கு அருள்புரிகின்றனர். சிவனின் பஞ்ச சபைகளில் சித்திர சபையாகவும், அம்மனின் சக்தி பீடங்களில் தரணி பீடமாகவும் இத்தலம் உள்ளது. பவுர்ணமி அன்று நவசக்தி பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமையில் பராசக்தி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணம் நடக்கும். ஆடியில் நடக்கும் பத்ரதீப விழாவில் 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு அபிஷேகம் நடக்கும். எப்படி செல்வது: தென்காசியில் இருந்து 5 கி.மீ., நேரம்: காலை 6:00 – 12:00 மணி; மாலை 4:00 – 7:30 மணிதொடர்புக்கு: 04633 – 283 138

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிபட்டணம் திரவுபதி ...

சிவகாசி: சிவகாசி ரிசர்வ் லைன் உமாமகேஸ்வரி அம்மன் ...

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள எஸ்.ஆர் பட்டினம் ...

முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் 50ம் ...

நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ...

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முத்துமாரியம்மன் ...