📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 24, 2026 11:04 AM

 பத்திர பதிவுக்கு லஞ்சம்: ஆடியோ பரவியதால் சார் பதிவாளர் மாறுதல்

 பத்திர பதிவுக்கு லஞ்சம்: ஆடியோ பரவியதால் சார் பதிவாளர் மாறுதல்

ராமநாதபுரம்: லஞ்சம் குறித்து பேசிய ஆடியோ பரவியதால் திருவாடானை சார்பதிவாளர் இட மாறுதல் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சில நாட்களுக்கு முன்பு பத்திரம் பதிவு செய்யும் ஒரு எழுத்தரிடம் ஒருவர் பத்திரம் பதிவு செய்தார். அப்போது அரசு கட்டணத்தை விட ரூ.5000 கூடுதலாக வசூல் செய்யப்பட்டது. பத்திரம் பதிவு செய்தவர் பத்திர எழுத்தரிடம் பணியாற்றும் ஒரு பெண் ஊழியரிடம் அலைபேசியில் அரசு கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டார்.

அதற்கு அந்த பெண் ஊழியர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த உரையாடல் குறித்த ஆடியோ பரவியது. இந்த ஆடியோவால் சார்பதிவாளர் மாலினி தேவகோட்டைக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

மாவட்டப் பதிவாளர் சீனிவாசன் கூறுகையில், சார்பதிவாளர் தேவகோட்டைக்கு மாறுதல் செய்யப்பட்டார். ஆடியோ குறித்து விசாரிக்கப்படுகிறது. தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.