📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 24, 2026 02:04 PM

பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் ஏற்றும் நிலையம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்!

பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் ஏற்றும் நிலையம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்!

பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் ஏற்றும் நிலையம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட சக்தி கார்டன் பகுதியில், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் ஏற்றும் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சக்தி கார்டன் குடியிருப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 1993-ஆம் ஆண்டு இந்தப் பகுதி வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டு, உரிய அனுமதி பெறப்பட்டதாகவும், அப்போது பூங்கா அமைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் ஏற்றும் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், சம்பவ இடத்தில் திரண்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

50-க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி, கழிவுநீர் ஏற்றும் நிலையத்தை இப்பகுதியில் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு வகையில் குறிப்பிட்டு, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (CMDA) தவறான தகவல்களை அளித்து அனுமதி பெறப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், இதுதொடர்பாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அப்பகுதியில் நடைபெற்று வந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளங்களும் மண்ணைக் கொண்டு மூடப்பட்டன.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “சென்னீர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த இடம், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் பூங்கா அமைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்ட இடமாகும். இதுவரை இங்கு பூங்கா அமைக்கப்படவில்லை. தற்போது அந்த இடத்தில் கழிவுநீர் ஏற்றும் நிலையம் அமைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு அளிக்கிறார்கள்.