📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 01, 2026 04:04 AM

பயணிகளுக்கு மகிழ்ச்சி! சென்னை, போடி உட்பட 14 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!

பயணிகளுக்கு மகிழ்ச்சி! சென்னை, போடி உட்பட 14 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!

பயணிகளுக்கு மகிழ்ச்சி! சென்னை, போடி உட்பட 14 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!

சென்னையில் இருந்து போடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி செல்லும் ரயில்கள் உட்பட 14 சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது.

இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். குறிப்பாக ரயில் பயணிகளுக்கு ஏற்றவாரு ரயில் சேவைகளில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

போத்தனூர்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் (06028) 12 சேவைகளும், மறுமார்க்கத்தில் (06027) 12 சேவைகளும் செப்.4-ல் இருந்து செப்.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06070) செப்.3-ல் இருந்து செப்.24 வரை 4 சேவைகளும், மறுமார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) செப்.4-ல் இருந்து செப்.25 வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி