📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology November 26, 2026 04:03 AM

ரேஷன் அரிசி கடத்தல் பொதுமக்கள் புகார்

ரேஷன் அரிசி கடத்தல் பொதுமக்கள் புகார்

பல்லடம்: ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, மகாலட்சுமி நகரில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சில வீடுகளில் இருந்து ரேஷன் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்கிச் செல்லும் அரிசியை, இருசக்கர வாகனங்களில் வரும் சிலர் வீடுகளுக்கே சென்று மூட்டை மூட்டையாக வாங்கி, விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த முறைகேட்டுக்கு அதிகாரிகள் சிலரும் உறுதுணையாக இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அரிசி கடத்தல் வெளிப்படையாக நடப்பது தெரிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படும் நிலையில், ரேஷன் அரிசி கடத்தலால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பல்லடம் வட்ட வழங்கல் அலுவலக வருவாய் ஆய்வாளர் ஜெயந்தியை தொடர்பு கொண்டபோது, அவர் நமது மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை.