📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 02, 2026 10:33 AM

ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்: சென்னையில் இன்று நடக்கிறது

ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்: சென்னையில் இன்று நடக்கிறது

கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் இ-கே.ஒய்.சி. (மின்னணு முறையில் வாடிக்கையாளரை அறி தல்) பதிவு சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் இன்று நடைபெறும் சிறப்பு முகாமுக்கு சென்று தங்க ளது கைவிரல் ரேகையை பதிவு செய்திட வேண்டும். பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம்.

எனவே, அரசின் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் விரல் ரேகைப் பதிவை விடுதலின்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.