ரெயில் பயணிகளின் கவனத்திற்கு..! தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் மற்றும் சிறப்பு ரெயில்கள் நீட்டிப்பு குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் உள்ள பெடாபாரியா மற்றும் நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 5,12 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12840), அதற்கு மாற்றாக சென்ட்ரலில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக, இரவு 9 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும்.
போத்தனூர்-சம்பல்பூர் இடையே சிறப்பு ரெயில்
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து வருகிற செப்டம்பர் 9-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.08311), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 1.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வருகிற செப்டம்பர் 11-ந்தேதி முதல் நவம்பர் 27-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை மட்டும்) மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (08312), மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூர் சென்றடையும்.
மதுரை-கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரெயில் நீட்டிப்பு
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01925), வருகிற செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து கான்பூர் சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (01926), வருகிற செப்டம்பர் 5-ந்தேதி முதல் நவம்பர் 28-ந்தேதி வரையில் (சனிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.