📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 31, 2026 11:03 AM

திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

சென்னை: அடிப்படை உறுப்பினர் உள்பட திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகிய அவர், திமுகவில் ஐக்கியமானார். அவருக்கு திமுகவின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. இவர், சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அண்மையில், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அடிப்படை உறுப்பினர் உள்பட திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார். மேலும், தற்போதைக்கு வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.