📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 19, 2026 09:03 PM

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரொமோ வெளியீடு!

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரொமோ வெளியீடு!

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள், வெளியாக இரண்டு நாள் இருக்கும் நிலையில், பாடலின் தலைப்பை ப்ரொமோ வீடியோவாக படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் பாடலின் தலைப்பை ப்ரொமோ வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘இன்னும் இரண்டு நாளில் ‘அலே போலேலோ’ காய்ச்சல் பரவ உள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகிறது என்று தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில், செண்டை மேளத்தின் தாளத்தில், ‘ஆஆஆ.. கப்பம்பல போலே...’ என ஆண் குரல் பாட ஆரம்பிக்க அனிருத்தின் துள்ளல் இசை நம்மை பாடலுக்குள் இழுக்க, திரையில் பச்சை உடை நடன கலைஞர்களின் பின்னணியில், நடிகை பூர்ணா கேரளத்துக்கே உண்டான வெள்ளை சேலையில் இசைக்கேற்ப ஆடுகிறார்.

இசை மங்கும்போது, ரஜினி அவரின் ட்ரேட் மார்க் நடையுடன் வெளிப்படுகிறார். இப்போது இசை, ‘அல்ல போலலே’ ப்பாடலின் தலைப்பை ஒலித்து வேகம் எடுக்க இன்னும் இரண்டு நாளில் பாடல் எனக் காட்டி ஆர்வத்தைத் தூண்டுகிறது ப்ரமோ.

அனிருத், கேரள இசை பின்னணியில், தமிழகத்தின் தேவராட்டம் போல.. நமக்குள் இசையை ஏற்றி பாடலுக்காக ஏங்க வைக்கிறார்.

இதனிடையே ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா...’ பாடல் தமன்னாவையும், இந்தப் பாடலில் ஆடி இருக்கும் பூர்ணாவையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Ala Bolelo fever is about to begin in 2 days! 🤩🪘#Jailer2 First Single #AlaBolelo is releasing on Aug 21 🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @shamna_kkasim @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren… pic.twitter.com/7nfjXHf0vM