📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 28, 2026 07:02 PM

ரோகிணிக்கு வளைகாப்புக்கு நீங்க யாரும் வரக்கூடாது.. முகத்திலடித்த சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்

ரோகிணிக்கு வளைகாப்புக்கு நீங்க யாரும் வரக்கூடாது.. முகத்திலடித்த சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. ரோகினி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு வளைகாப்பு வைப்பதற்கான நல்ல தேதியை குறிக்க சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா இருவரும் ஜோசியரை சந்திக்க செல்கின்றனர். ஜோசியர் ஒரு நல்ல நாளை குறித்து கொடுத்து, அந்த தேதியில் வளைகாப்பு நடத்தலாம் என்று கூறுகிறார். இதையடுத்து அதே தேதியில் வளைகாப்புக்கான பத்திரிகையும் அடித்து விடுகின்றனர்.

கார்த்திகை தீபம்: இதற்கிடையில், ரேவதிக்காக கார்த்திக் ஆசை ஆசையாக கட்டிய ஆர்கே இல்லத்திற்கு ரேவதி, கார்த்திக் மற்றும் பரமேஸ்வரி பாட்டி மூவரும் செல்கின்றனர். இனிமேல் நாம் இந்த வீட்டில்தான் வாழப்போகிறோம் என்றும், ரேவதிக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து இந்த வீட்டை கட்டியதாகவும் கார்த்திக் கூறுகிறார். இதைக்கேட்டு ரேவதி மிகுந்த சந்தோஷம் அடைகிறார். மேலும், இந்த வீட்டை ரோகினியும் ஸ்வாதியும் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று ரேவதி கூறுகிறார். இதையடுத்து கார்த்திக் அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு வரவழைக்கிறார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது ரேவதி பரதநாட்டியம் ஆடுகிறார். ரேவதியின் நடனத்தை பார்த்த கார்த்திக், இத்தனை நாட்களாக உனக்கு பரதநாட்டியம் ஆடத் தெரியும் என ஏன் சொல்லவில்லை என ஆச்சரியத்துடன் கேட்கிறார்.

ரோகிணிக்கு வளைகாப்பு: மறுபுறம் சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா இருவரும் ரோகினியின் வளைகாப்பு பத்திரிகையை எடுத்துக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு வருகின்றனர். சாமுண்டீஸ்வரியை பார்த்ததும் ரேவதி மிகவும் ஆசையாக ஓடிச்சென்று, "வாங்கம்மா, வாங்க" என்று அழைக்கிறார். வீட்டிற்குள் வந்த சாமுண்டீஸ்வரி, தனது மூத்த மகள் ரோகினிக்கு வளைகாப்பு வைத்திருக்கிறேன். அதற்காக முதல் பத்திரிகையை ரேவதியிடம் கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன், என் மகள் வளைகாப்புக்கு நீங்க யாரும் வரக்கூடாது என்று சொல்கிறாள். சாமுண்டீஸ்வரி கூறிய இந்த வார்த்தையை கேட்டு ரேவதி வேதனை அடைகிறாள்.

கவலையில் ரேவதி: அக்காவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தான் இல்லாமல் எப்படி என கண்கலங்குகிறாள். அப்போது அவரை சமாதானப்படுத்தும் கார்த்திக், "நீ கவலையே படாதே ரேவதி. நிச்சயமாக உன்னுடைய அக்காவின் வளைகாப்பில் நீ இருப்பாய்" என்கிறார். இனால் அடுத்ததாக ரேவதி தனது அக்கா ரோகினியின் வளைகாப்பில் கலந்து கொள்வாரா? சாமுண்டீஸ்வரியின் முடிவை மீறி கார்த்திக் என்ன செய்யப் போகிறார்? என்பதை பார்க்கலாம்.