📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 12, 2026 10:34 AM

ரஷ்ய அதிபர் புடின் கைகளில் 'திருக்குறள்'! பிரதமர் மோடி கொடுத்த தமிழ் 'ட்ரீட்'

ரஷ்ய அதிபர் புடின் கைகளில் 'திருக்குறள்'! பிரதமர் மோடி கொடுத்த தமிழ் 'ட்ரீட்'

ரஷ்ய அதிபர் புடின் கைகளில் 'திருக்குறள்'! பிரதமர் மோடி கொடுத்த தமிழ் 'ட்ரீட்'

உலகத் தலைவர்களில் ஒருவரான ரஷ்ய அதிபர் புடினின் கைகளுக்கு தமிழ்நாட்டின் உலகப் பொதுமறையான திருக்குறள் சென்றிருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும், பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

Published : September 11, 2026 at 6:29 PM IST

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, உலகப் பொதுமறையான 'திருக்குறளின்' ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகத்தை பரிசாக வழங்கி ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 11 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இந்தியா வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மிக முக்கியமான இரு தரப்பு பேச்சுவார்த்தை புதுடெல்லியில் இன்று நடைபெற்றது.

இரு நாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த வேளையில், உலக நாடுகளின் கண்கள் அனைத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு அங்கே அரங்கேறியது.

Delighted to meet President Putin in Delhi, less than two weeks after our meeting in Bishkek. During today’s meeting we talked about:Closer trade ties, including implementation of the Programme for Economic Cooperation 2030.Cooperation in areas like infrastructure, energy,… pic.twitter.com/nLaMDxnDEc

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகத்தை (Russian version of sacred Tamil scripture Thirukkural) மிக நெகிழ்ச்சியோடு பரிசாக வழங்கினார்.

அப்போது, உலக நிர்வாகத் திறன், அரசியல் நெறிகள், மனித வாழ்வியல் மற்றும் உலகளாவிய ஒழுக்கம் ஆகியவற்றை வெறும் இரண்டே வரிகளில் விளக்கும் 1,330 குறள்களை கொண்ட திருக்குறளின் சிறப்பை அதிபர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி விவரித்தார்.

ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம், திருவள்ளுவரின் காலத்தால் அழியாத சிந்தனைகளை ரஷ்ய மக்களும் எளிதாக புரிந்து கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ராணுவம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல முக்கிய ஒப்பந்தங்கள் ஒருபுறம் விவாதிக்கப்பட்டாலும், பிரதமர் மோடி இந்த தமிழ் இலக்கிய பரிசை தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்தியாவின் கலாச்சார பெருமையை சர்வதேச அரங்கில் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளார்.

மொழிகள் மற்றும் நாட்டின் எல்லைகளைக் கடந்து திருவள்ளுவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள் உலகெங்கும் உள்ள மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய உலகத் தலைவர்களுக்கு தமிழ் நூல்கள் பரிசளிக்கப்படுவதாக பிரதமர் மோடி அடிக்கடி பெருமிதத்தோடு குறிப்பிடுவது வழக்கம்.