📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 01, 2026 09:33 AM

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜி

புதுடெல்லி: ​டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு முன்​ஜாமீன் வழங்​கியது உச்ச நீதி​மன்​றம். பாஸ்​போர்ட்டை ஒப்​படைக்க வேண்​டும். நிபந்​தனை​களை மீறி​னால் முன்​ஜாமீன் ரத்து செய்​யப்​படும் என்​றும் எச்​சரித்​துள்​ளது.

டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில், தமிழ்​நாடு ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்பு இயக்​குநரகம் ஜூலை 28-ம் தேதி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது புதி​தாக வழக்​குப் பதிவு செய்​தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க உயர் நீதி​மன்​றம் மறுத்துவிட்டது.இதையடுத்து உச்ச நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் கோரி உடனடி​யாக செந்​தில் பாலாஜி மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த மேல்​முறை​யீட்டு வழக்கை, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​ ஜாய்​மால்யா பக் ஷி ஆகியோர் கொண்ட அமர்வு விசா​ரணை நடத்​தி​யது. அப்​போது செந்​தில் பாலாஜி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ‘‘கடந்த 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை நடை​பெற்ற விவ​காரத்​தில் முதற்​கட்ட விசா​ரணை ஏற்​கெனவே நடத்​தப்​பட்​டது. அப்​போது கூடு​தல் செயல​ராக இருந்​தவர் ஒரு வாக்​குமூலத்​தைத் தெரிவித்துள்​ளார்.

தமிழகத்​தில் தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட பிறகு தன்​னுடைய வாக்​குமூலத்தை மாற்றி கூறி பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்​துள்​ளார். அதன் அடிப்​படை​யில் சென்னை உயர் நீதி​மன்​ற​மும் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. ஆட்சி மாற்​றத்​துக்​குப் பிறகு அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால் இந்த விவ​காரம் மீண்​டும் தொடங்​கப்​பட்​டுள்​ளது’’ என்று வாதிட்​டார்.

தமிழக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் குரு கிருஷ்ணகு​மார் வாதிடு​கை​யில், ‘‘செந்​தில் பாலாஜி​ எந்​தெந்​தத்துறை​யில் அமைச்​ச​ராக இருந்​தாரோ அந்த துறை​யில் அவர் மீது ஊழல் புகார்​கள் உள்​ளன. அதற்​கான முகாந்​திரங்​கள் இருப்​ப​தால்​தான் புலன் விசா​ரணை தொடங்​கப்​பட்​டுள்​ளது. அரசி​யல் காரணங்​களுக்​காக வழக்கு தொடுக்​கப்​பட​வில்​லை.

இது ஒரு மிகப்​பெரிய ஊழல் விவ​காரம் என்​ப​தால் புலன் விசா​ரணை​யின் போது தேவை ஏற்​பட்​டால் மட்​டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்​டிய நிலை உரு​வாகும். செந்​தில் பாலாஜியைப் பொறுத்த வரை வழக்​கின் விசா​ரணைக்கு முழு​மை​யாக ஒத்​துழைக்​காமல் இழுத்​தடிக்​கக் கூடிய நபர்’’ என்று தெரி​வித்​தார்.

இந்த கருத்தை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், அவர் குற்​ற​வாளி என்​றால் விளைவு​களை அவர் சந்​தித்​து​தான் ஆக வேண்​டும்’’ என்று கூறினர். அப்​போது குறுக்​கிட்ட தமிழக அரசு வழக்​கறிஞர், ‘‘புலன் விசா​ரணை​யின் போது செந்​தில் பாலாஜியைக் காவலில் எடுக்க வேண்​டிய அவசி​யம் ஏற்​பட்​டால் என்ன செய்​வது?’’ என்று சந்​தேகம் எழுப்​பி​னார்.

அதற்கு நீதிப​தி​கள், ‘‘அவ்​வாறு காவலில் எடுத்து விசா​ரிக்க வேண்​டிய நிர்ப்​பந்​தம் ஏற்​பட்​டால், விதி மீறல்​களில் செந்​தில் பாலாஜி ஈடு​பட்​டாலோ, விதி​மீறல் நடந்தாலோ அரசு தரப்பு இந்த நீதி​மன்​றத்தை உடனடி​யாக அணுகலாம்’’ என்று நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். அப்​போது, செந்​தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல், ‘‘டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பான வழக்​கின் விசா​ரணைக்​குச் செந்​தில் பாலாஜி முழு ஒத்​துழைப்பு வழங்​கு​வார். அவர் எங்​கும் தப்​பிச் செல்ல மாட்​டார்’’ என்று உறு​தி​யளித்​தார்.

இதையடுத்​து, செந்​தில் பாலாஜிக்கு முன்​ஜாமீன் வழங்​கி, அவரை கைது செய்​யக் கூடாது என்று நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். மேலும், செந்​தில் பாலாஜி தனது பாஸ்​போர்ட்டை ஒப்​படைக்க வேண்​டும். சாட்​சிகள் மீது ஆதிக்​கம் செலுத்​தக் கூடாது. விசா​ரணைக்கு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். இவற்றை மீறி​னால், முன்​ஜாமீன் ரத்து செய்​யப்​படும் என்று நீதிப​தி​கள் எச்​சரித்​தனர்.