📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 19, 2026 08:30 PM

Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07

Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07

Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?

Tamil Nadu Power Shutdown (20-07-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 20 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கோவை மாவட்டம்

பட்டணம் துணை மின் நிலையம்

பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம் .

காடுவெட்டிப்பாளையம் துணை மின் நிலையம்

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி

கணியூர் துணை மின் நிலையம்

கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்.

திருப்பூர் மாவட்டம்

ஒலப்பாளையம், பழையகோட்டை மற்றும் காடையூர் துணை மின் நிலையங்கள்

ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு, பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன் வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம், காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாறை மற்றும் பொன்னங்காளி வலசு.

ஊத்துக்குளி துணை மின் நிலையம்

ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., விஜிபுதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, காவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூர்தொட்டியவலசு, வயக்கா ட்டுபுதூர், ஏ.கத்தாங்கன்னி.

செங்கப்பள்ளி துணை மின் நிலையம்

செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடாபாளையம், பள்ளபாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூர், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை.

இச்சிப்பட்டி துணை மின் நிலையம்

இச்சிப்பட்டி, சின்ன அய்யன் பெருமாகவுண்டம் பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுபுதூர், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்து முட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்னகோடாங்கிபாளையம், சாமளாபுரம், சூரியா நகர் மற்றும் ராம்நகர் பகுதிகள்

திண்டுக்கல் மாவட்டம்

ரமணநாயக்கன்பட்டி, எழுவம்பட்டி மற்றும் மஞ்சளாறு அணை பகுதிகள்.

பெரம்பலூர் மாவட்டம்

திருவிளக்குறிச்சி, தேரணி, காரை பீடர் பகுதிகள், இரூர் பீடர் பகுதிகள் மற்றும் ஆவின் பீடர் பகுதிகள்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி