📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 23, 2026 06:07 PM

Tamil Nadu Today Top News: இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

Tamil Nadu Today Top News: இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

Tamil Nadu Today Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

Tamil Nadu Top 5 News: "இன்றைய (ஜூலை 22) டாப் 10 தலைப்புச் செய்திகள் இவை’ இதை படித்தால்போதும்...

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.

ஜூலை 23,2026ஆம் தேதிக்கான முக்கிய தலைப்புச் செய்திகள்.

1. CM விஜயின் ஜனநாயகன் ரிலீஸ்:

முழு நேர அரசியல் பயணத்திற்கு முன்பாக விஜய் நடிப்பில் உருவான கடைசி திரைப்படமான ஜனநாயகன், கடந்த பொங்கலின்போது வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக சுமார் 6 மாதங்கள் கழித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் காலை 9 மணிக்கு தொடங்கும் நிலையில், ஆந்திரா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் 6 மணிக்கே தொடங்கியுள்ளது. நள்ளிரவு முதல் திரையரங்கு வாசல்களில் திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், குத்தாட்டம் போட்டும், பிரமாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும் ஜனநாயகன் பட வெளியீட்டை கொண்டாடினர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பே திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்து ஒரு கோடி பேருக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டாலும், வசூலில் எந்தவித பாதிப்பும் இன்றி முதல் நாளே உலகம் முழுவதும் சுமார் 100 கோடியை விஜயின் கடைசி படம் வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

2. தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?

தூத்துக்குடியில் கைதி அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என, நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார். அதன்படி, காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாச்சலத்தை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். கைது செய்யப்பட்ட அன்றைய தினமே அருணாச்சலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம். மயங்கி விழுந்த அருணாச்சலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை அடிக்கவில்லை, இது லாக்-அப் மரணம் இல்லை” என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.

3. காவிரி ஆணையம் பொம்மை ஆணையம்": அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற கர்நாடக அரசு உடனடியாகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்ததற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

4. தமிழ்நாடு முழுவதும் வகுப்பு புறக்கனிப்பு போராட்டம்! நீட் தேர்வை எதிர்த்து மாணவர் கூட்டமைப்பு அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் 26ஆம் தேதி ஞாயிறன்று மாபெரும் பேரணி நடைபெறுவிருப்பதாக தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது இந்த போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தின் பின்னணி மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை TSYF விளக்கியது. நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை (NTA) செயல்பாடுகள் மற்றும் கல்வியில் மாநிலங்களின் உரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து மாணவர் அமைப்பு தனது கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியது.

5. இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி

புதுச்சேரி : கால்பந்து உலகக் கோப்பை தொடர், பரபரப்பான இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த உலகக் கோப்பை கொண்டாட்டத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடும் வகையில், புதுச்சேரியின் பிரபலமான தனியார் உணவகம் கால்பந்து வடிவில் இட்லியை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

6. விழுப்புரத்தின் 'டைம் மெஷின்' - 5,000 ஆண்டு பழமையான கற்தேய்ப்பு குழிகளும் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டும்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே, தமிழர்களின் பண்டைய நீர் மேலாண்மைக்கும், 5,000 ஆண்டுகள் பழமையான வாழ்வியலுக்கும் சான்றாகப் புதிய கற்கால கற்தேய்ப்பு குழிகள் மற்றும் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்புக் கல்வெட்டு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

7. நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவ, மாணவிகள் , சமூக ஆர்வலர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு காவல் ஆணையர் அனுராக் குமாருக்கு, துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து அனுமதி அளித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி