📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 21, 2026 05:31 PM

Tamil Nadu Top 5 News: இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

Tamil Nadu Top 5 News: இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

Tamil Nadu Top 5 News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

"இன்றைய (ஜூலை 21) டாப் 10 தலைப்புச் செய்திகள் இவை’ இதை படித்தால்போதும்...

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.

ஜூலை 21,2026ஆம் தேதிக்கான முக்கிய தலைப்புச் செய்திகள்.

1. இன்றைய வானிலை நிலவரம்:

தமிழ்நாட்டில் வரும் 27ஆம் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம், 21-07-2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் தெரிவித்துள்ளது.

2. பிரபல பாடகர் அறிவு கைது

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் தலைமைச்செயலகத்திற்கு பிரபல பாடகர் அறிவு இன்று காலை செல்ல முற்பட்டார். அப்போது திடீரென நீட் தேர்விற்கு எதிராக முழக்கமிட்டவர் முதலமைச்சர் விஜய் நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என முழக்கமிட தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாடகர் அறிவை சுற்றிவளைத்த போலீசார் தரதரவென கைது செய்து இழுத்து சென்றனர். இந்த நிலையில், இந்த தகவலை கேள்விப்பட்ட முதலமைச்சர் விஜய் பாடகர் அறிவை தனது அறைக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அறிவு முதலமைச்சர் விஜய்யை சந்திக்க அழைத்து செல்லப்பட்டார்.

3. விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் கைது விவகாரம்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் திமுகவைச் சேர்ந்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் நேற்று கைது செய்யப்பட்டார். இதற்காக கைது வாரண்டுடன் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள வழங்கி ஒத்துழைக்குமாறு வலியுறுத்தினார். இதை ஏற்காத மார்க்கண்டேயன், சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவை. அவர் அனுமதி அளித்தாரா? என ரூல்ஸ் பேசினார். அப்போது குறுக்கிட்ட பெண் காவலர் ஒருவர் உங்கள் மரியாதையை நீங்களே குறைத்துக் கொள்ள வேண்டாம் என வலியுறுத்த, அங்கிருந்தவர்கள் ஆத்திரமடைந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

4. தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், தவெக அரசு பதவியேற்றதும் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இன்று அறிவித்துள்ளார். அடுத்த நாள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5.தந்தை - மகன் இணைந்த நிலையில், பாமக பொதுக்கூட்டம் கூடுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் வரும் 29.07.2025 (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கத்தில் நடைபெறும் என்ன கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக அறிக்கை.

6.இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’-வுக்கு மத்திய அரசு அதிரடி ஒப்புதல்!

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு (Dengue Vaccine) மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை 4 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் செலுத்திக் கொள்ளலாம்.

7.கர்நாடக அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சி-யாக உயர்வு:

கர்நாடக காவிரி அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சி-யாக உயர்ந்துள்ள நிலையில், நாளை நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

8. பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..!

தமிழ்நாட்டை மிக நீண்ட காலம் ஆண்ட கட்சி என்ற பெருமையை கொண்ட அதிமுக, அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதையடுத்து, எஸ்.பி, வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கட்சி இரண்டு பிரிவுகளாக செயல்படுவது அம்பலமானது. அதோடு, பரம எதிரியான திமுகவுடன் கைகோர்த்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயன்றதாகவும் அதிருப்தியாளர்களால் குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரனமாகவே விஜய் அரசுக்கு ஆதரவளித்ததாகவும், அதிமுக தோல்வி குறித்து பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தான், பொதுக்குழுவை கூட்டவும், அங்கு தனக்கு சாதகமான முடிவுகளை எட்டவும், கட்சிக்குள் மறுசீரமைப்பு பணிகளை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி