Tamilnadu Power Cut : டெய்லி நைட் கரெண்ட் கட் பண்ணுவீங்க.. தூங்க முடியலை- கதறும் மக்கள்
Tamilnadu Power Cut : டெய்லி நைட் கரெண்ட் கட் பண்ணுவீங்க.. தூங்க முடியலை- கதறும் மக்கள்- நடப்பது என்ன.?
Tamilnadu Power Cut : சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தொடரும் மின் வெட்டு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இரவு 3 முதல் 4 மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை நடு ரோட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் பகல் முழுவதும் வேலை செய்து விட்டு இரவில் நிம்மதியாக ஓய்வெடுக்க நினைக்கும் மக்களுக்கு மின் வெட்டால் வீட்டிற்குள் இருக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் சென்னையில் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பல மணி நேர மின் வெட்டு
அதிலும் மின் வாரிய அலுலகத்தை முற்றுகையிட்டு போராடுகின்றனர். ஆனால் மின் வாரியத்தில் உள்ள அதிகாரிகளால் உரிய பதில்களை அளிக்க முடியாத காரணத்தால் திணறி வருகிறார்கள். அந்த வகையில், நேற்று அம்பத்தூர், மாதவரம்,கள்ளிக்குப்பம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் கூடிய அப்பகுதி மக்கள் மின் வாரிய அதிகாரிகளை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். ஒரு கட்டத்தில் மின் வாரிய அதிகாரிகளை மிரட்டும் வகையிலும் ஒரு சிலர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின் வெட்டு - மக்கள் போராட்டம்
அந்த வகையில் மின் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேசும்போது, தங்களால் வீட்டிற்குள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. கடந்த 20 நாட்களாக தொடர்ந்து தொந்தராக உள்ளது. "எங்களலாம் பாத்தா எப்படி தெரியுது? டெய்லியுமா கரெண்ட்ட கட் பண்ணுவீங்க.. வேலைக்கு போய்ட்டு வந்து நிம்மதியா தூங்க கூட முடியவில்லை என ஆவேசமாக கேள்வி எழுப்பினர். மேலும், மின் வெட்டு தொடர்பாக போன் செய்தால் எந்தவித உரிய பதிலும இல்லை. கேள்வி கேட்டா கத்துறோம்னு சொல்றீங்க.. வேற எப்படி கேட்கணும் உங்க கிட்ட? ஐயா சாமி கரெண்ட் விடுங்கனு கேட்கணுமா? ஆவேசமாக பேசினர். இதனால் மின் வாரிய அலுவலகம் பதற்றமாக சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக வீடுகளில் ஏசி, மின் விசிறி உள்ளிட்டவைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக மின் வெட்டு ஏற்படுதுகிறது.
மின் வெட்டு காரணம் என்ன.?
கோடை காலத்தில்,மின் தேவையை கணிக்காமல் விட்டது ஏன் என்ற கேள்வியானது எழுந்து வருகிறது. மேலும் கடந்த காலத்தில் அதிமுக, திமுக ஆட்சியில் மின்சார தேவையை கணக்கிட்டு கூடுதல் பணம் கொடுத்து மின்சாரம் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசு அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி