📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 28, 2026 03:32 AM

தேசிய விளையாட்டு போட்டி கே.எம்.சி. பள்ளி சாதனை

தேசிய விளையாட்டு போட்டி கே.எம்.சி. பள்ளி சாதனை

திருப்பூர்:தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பெருமாநல்லுார் கே.எம்.சி. பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

தேசிய சாம்பியன்ஷிப் 2026 பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுபோட்டிகள் கோவாவில் நடைபெற்றது. இதில், பெருமாநல்லுார் கே.எம்.சி. பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். கால்பந்து போட்டியில் விஷ்ணுராஜ் தலைமையிலான அணியில், ஆகாஷ் அகிலவன், யுவனேஷ், சஞ்சித், ரிதுன் பிரணேஷ் ஆகியோர் விளையாடி, முதலிடம் பெற்றனர். கூடைப்பந்து போட்டியில் யுவனேஷ் தலைமையிலான அணி, தடகளம் 100 மீ. ஓட்டத்தில் சந்தோஷ், பிரணவ் ஆதித், 200 மீ. ஓட்டத்தில் யுவனேஷ் ஆகியோரும் முதலிடம் பெற்றனர்.

மாணவியர் பிரிவில், பிருந்தா 100 மற்றும் 200 மீ., ஓட்டத்தில் முதலிடம், சுதர்சனா 100 மீ. ஓட்டம் மற்றும் யோகா போட்டியில் முதலிடம் பெற்றனர். அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பெற்று இப்பள்ளி மாணவர்கள் ஓவரால் சாம்பியன்ஷிப் கோப்பையைப் பெற்றனர். தேசிய போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி தாளாளர் மனோகரன், தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா, பள்ளி முதல்வர் லதா உள்ளிட்டோர் பாராட்டினர்.