📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 08, 2026 12:34 PM

தி.மு.க., ஆட்சியில் பெயரளவுக்கு செயல்பட்ட அம்மா உணவகங்கள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சியில் பெயரளவுக்கு செயல்பட்ட அம்மா உணவகங்கள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

சென்னை: ''தி.மு.க., ஆட்சியில், அம்மா உணவகங்கள் பெயரளவுக்கே செயல்பட்டன,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - அக்ரி கிருஷ்ணமூர்த்தி: அ.தி. மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, 'தாலிக்கு தங்கம்' திட்டத்தை, 'அண்ணன் சீர்' என்றும், விலையில்லா மடிக்கணினி திட்டத்தை, வெற்றி மடிக்கணினி என்றும், பசுமை வீடுகள் திட்டத்தை , வெற்றி வீடு கட்டும் திட்டம் என்றும் மாற்றியுள்ளீர்கள்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா : முந்தைய தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதோடு, அதை மேம்படுத்தியும் வருகிறோம். கடந்த தி.மு.க., ஆட்சியில், அம்மா உணவகங்கள் பெயரளவுக்கு மட்டுமே இருந்தன; எங்கும் சரியாக செயல்படவில்லை. இப்போது பெயரை மாற்றாமல், நிதியை ஒதுக்கி, அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.

தி.மு.க., - கே.என்.நேரு: தி.மு.க., ஆட்சியில், ஐந்தாண்டுகளும் அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக நடத்தினோம். அ.தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட பணியாளர்களே இப்போதும் பணியில் உள்ளனர். இதற்காக அரசு நிதி ஒதுக்குவதில்லை. மாநகராட்சி, நகராட்சிகள் தான் நிதி ஒதுக்குகின்றன.

அ.தி.மு.க., - வேலுமணி: தி.மு.க., ஆட்சியில், அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இது தொடர்பாக, நேரு அமைச்சராக இருக்கும் போது, கேள்வி எழுப்பியிருக்கிறேன். 2018ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், அம்மா உணவகங்களுக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அ.தி.மு.க., - பழனிசாமி: முந்தைய ஆட்சியின் திட் டங்களை தொடரும் போது , பெயர் மாற்றாமல், அதே பெயரில் செயல்படுத்தினால் பிரச்னை இருக்காது.

இவ்வாறு விவாதம் நடந்தது.