தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள்: இன்று விசாரணை
- நமது நிருபர் -
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றாத விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் இடைக்கால மனுக்கள் அனைத்தும் இன்று(நவ.,27) விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி ஹிந்து தமிழர் கட்சியை சேர்ந்த ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, வழக்கறிஞர் வி.ராமசுப்பு தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு, தீபத்துாணில் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரிய ரிட் மனு, ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகியவை விசாரணைக்கு வருகின்றன.
இந்த மனுவில் கீழ்க்கண்ட 11 பேர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்:ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் வினய்மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாமதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன்ஹிந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர்திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர்கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த 5 அறங்காவலர்கள்