📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 08, 2026 04:03 AM

திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெற்றிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெற்றிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெற்றிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி: திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி திருமயம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ ரகுபதியின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து உச்சநீதிமன்றத்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் சிந்தாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

தவெக வேட்பாளர் சிந்தாமணியின் தேர்தல் வழக்கை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது அவருடைய மனுவை நிராகரிக்கக் கோரி திமுக எம்எல்ஏ ரகுபதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ரகுபதியின் மனுவை ஏற்றுக் கொண்டு, தவெக வேட்பாளர் சிந்தாமணியின் தேர்தல் வழக்கை நிராகரித்து அண்மையில் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று நீதிபதிகள் பிரசாந்த்குமார் மற்றும் ஸ்ரீசந்திரசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.