திண்டுக்கல்லில் ஆக.1ல் தினமலர் வேளாண் வணிகத் திருவிழா
மதுரை: விவசாயத்தையும் விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் தினமலர், கோத்ரெஜ் அக்ரோவெட் சார்பில் வேளாண் வணிகத் திருவிழா திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மகாலில் ஆக.1 காலை 10:00 மணி முதல் மாலை வரை நடக்கிறது.
கருத்தரங்கில் என்னென்ன இவ்விழாவில் விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர், வேளாண் தொழில்முனைவோராக விரும்புவோர், பொதுமக்கள் பங்கேற்கலாம். கருத்தரங்கு, கலந்துரையாடல் நிகழ்ச்சியுடன் பாரம்பரிய மற்றும் நவீன மக்காச்சோள ரகங்களின் கண்காட்சியும் நடக்கிறது.
கோத்ரெஜ் அக்ரோவெட்டின் பூச்சிக்கொல்லி மற்றும் களை மேலாண்மையில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பங்கள், மக்காச்சோள விவசாயி களுக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், மகசூலை அதிகரிக்கவும் உதவுகின்றன.
அதிக மகசூல் வழங்கும் மக்காச்சோளம் ரகங்கள், பாரம்பரிய மக்காச்சோள ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய மக்காச்சோளம் சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள், தொழில்நுட்பங்கள், நவீன தொழில்நுட்பத்தால் பூச்சிக்கொல்லி மற்றும் களை மேலாண்மை குறித்த கருத்தரங்கு, கலந்துரையாடல் நிகழ்வு நடக்கிறது.
கண்காட்சியில் என்னென்ன மதிப்புக் கூட்டிய வேளாண் விளை பொருட்களின் வணிகத் தயாரிப்புகள், அங்கக விளைபொருட்கள், வேளாண் வணிகத் தொடர்புக்கு வழிகாட்டும் வணிகக்காப்பகங்கள், உணவுப்பொருளின் தர மேம்பாடு ஆகியவை கண்காட்சியில் இடம்பெறும், விற்பனையும் உண்டு.
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள், கால்நடை வளர்ப்போர், தொழில் முனைவோர், பொதுமக்கள் அனைவரும் கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.
முன்பதிவு செய்வோருக்கு இலவச 'கிட் பேக்' இந்த வேளாண் வணிகத் திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயர், முகவரியை 82200 16423 எண்ணில் தொடர்பு கொண்டோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.
மேலும் ஐயப்பா பிளாஸ்டிக் நிறுவனம் சார்பில் சொட்டுநீர்ப் பாசனத்திற்கான உபகரணங்கள் அடங்கிய 'கிட்பேக்' மற்றும் பரிசு வழங்கப்படும்.
விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, நவீன விவசாயத்தை தெரிந்து கொள்ள அனைவரும் வாருங்கள். கருத்தரங்கில் வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந் துரையா டும் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
தினமலர், கோத்ரெஜ் அக்ரோவெட் வழங்கும் 'வெல்லட்டும் வேளாண்மை' என்ற இந்த வேளாண் வணிகத் திருவிழாவின் பவர்டு பை ஸ்பான்சர் சுகுணா பம்ப்ஸ் அண்ட் மோட்டார்ஸ். கோ ஸ்பான்ஸர்: ஐயப்பா பிளாஸ்டிக்ஸ் இரிகேஷன் எக்யூப்மென்ட்ஸ் சப்ளையர், நாலெட்ஜ் பார்ட்னர்: மாபிப்.