📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 27, 2026 07:04 PM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை ஆகும் என பக்தர்கள் மேலானதாக தெரிவிக்கின்றனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர், பிஸ்கட், மோர் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் சாமியை பார்க்க நீண்ட நேரம் ஆவதாக பொதுமக்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். "முதன்முறையாக ஆய்வுக்கு வந்துள்ளேன். அனைத்தையும் சரிபார்த்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்" என்று அமைச்சர் ரமேஷ் உறுதி அளித்தார்.