📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 06, 2026 10:33 AM

திருவண்ணாமலை வருகிறார் அமித் ஷா

திருவண்ணாமலை வருகிறார் அமித் ஷா

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி போலீஸ் துறைக்கு, ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதினை வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் ஆக., 8ல் புதுச்சேரி வருகிறார்.

இதற்காக, டில்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் அவர், ஹெலிகாப்டர் வாயிலாக ஆக., 8 மாலை, 4:55 மணிக்கு புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி கடற்கரையையொட்டி உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அன்று இரவு தங்குகிறார். அதன்பின், 9ம் தேதி காலை, 8:10 மணிக்கு புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கும் விழாவில், போலீசாருக்கு ஜனாதிபதி விருதை அமித் ஷா வழங்குகிறார்.

அந்த விழாவிற்கு பின், காலை 10:50 மணிக்கு ஹெலிகாப்டர் வாயிலாக திருவண்ணாமலை சென்று, கோவிலில் தரிசனம் செய்கிறார். ரமணர் ஆசிரமத்துக்கும் செல்கிறார். பின், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை வந்து, அங்கிருந்து விமானம் மூலம் டில்லி செல்கிறார்.