📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 19, 2026 05:30 PM

தமிழின் சிறப்பு ழகரத்தின் வடிவம் ‘ஏணி’

தமிழின் சிறப்பு ழகரத்தின் வடிவம் ‘ஏணி’

தமிழின் சிறப்பு ழகரத்தின் வடிவம் பானை ஓடுகளில் ஏழு படிகளைக் கொண்ட ஏணி வடிவில் கீறப்பட்டுள்ளன.

திருச்சி: தமிழின் சிறப்பு ழகரத்தின் வடிவம் சிந்து சமவெளியில் ஏழு படிகளைக் கொண்ட ஏணியாக பொறிக்கப்பட்டுள்ளதாக சிந்து சமவெளி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் 'இந்து தமிழ் நாளிதழிடம் கூறியதாவது: இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் மலையாளத்தில் மட்டும் உள்ளது சிறப்பு ழகரம் (முகாரம்). நுனி நாக்கு அணர்ந்து அண்ணத்தை தடவ ரகார, ழகார ஆகிய இரண்டு எழுத்துகளும் பிறக்கும் என்கிறது தொல்காப்பியத்தின் எழுத்து அதிகாரம் நூற்பா. அச்சிறப்பு ழகரத்தின் வடிவம் சிந்து சமவெளியில் ஏழு படிகளைக் கொண்ட ஏணி வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏணியின் வடிவம் ஒன்று சிந்து சமவெளி நாகரிக பகுதி யைச் சேர்ந்த சுவத் பள்ளத் தாக்கிலும், ஹரப்பா பானை ஓடுகளிலும் மற்றும் தமிழகத்தில் அழகன்குளம், கரூர், கீழடி, கொடுமணல், கொங்கல் நகரம், கொற்கை,மாங்குடி, நெடுங்கூர்.

பட்டரைப்பெரும்புதூர், திரு நெல்வேலி, துலுக்கர்ப்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ள பானை ஓடுகளிலும் கீறலாக இடம் பெற்றுள்ளன.

விழிப்பு, கனவு, துரியம், துரியாதீதம் ஆகிய குறியீடு களுடன் ஒரு ஏணியின் வடிவம், கேரள மாநிலம் எடக்கல்லில் பாறையில் பொறிக்கப்பட்ட கோட்டு உருவமாக உள்ளது. இத்தொல்லியல் சான்றுகள் வாயிலாக, இமயம் முதல் குமரி வரை வாழ்ந்த பெருங்குடி மக்கள் சிறப்பு ழகரத்தின் வடிவத்தை கல்வியல் ரீதியில் நன்கு அறிந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

இதன் மூலம் மெய்யியல் ரீதியில் துரியநிலையை அடை வதற்கு, கல்வியல் ரீதியில் ஏழு படிகளைக் கொண்ட ஏணியின் வடிவமே செந்தமிழ் மொழியின் சிறப்பு ழகரம் என்பதும், இமயம் முதல் குமரி வரை வாழ்ந்த பெருங்குடி மக்கள் யோகநெறியை கடைபிடித்து வாழ்ந்த தமிழர்கள் என்பதும் தெரிகிறது.

துரிய நிலையை அடைந்ததொரு யோகி என் பதை உணர்த்தும் வகையில், தற்போதைய காலக்கட்டத்தில் கூட இறந்த ஒருவர் உடலை, ஏழு குறுக்கு குச்சிகளை கொண்ட மூங்கில் மர ஏணியில் கிடத்தி, நான்கு பேர் சுமந்து சென்று இடு காட்டில் புதைப்பது பழந்தமிழர் மரபாக தொடர்கிறது. ஏணியின் வடிவிலான சிறப்பு ழகரத்தை ஆங்கில மொழியில் ‘zh’ என முறைப்படி உச்சரிப்பதும், எழுது வதும் மிகச் சிறந்த செயலாகும்.