📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 23, 2026 08:31 AM

தமிழக அரசுக்கு கடந்த 3 மாதங்களில் ரூ.64,945 கோடி வருவாய்

தமிழக அரசுக்கு கடந்த 3 மாதங்களில் ரூ.64,945 கோடி வருவாய்

தமிழக அரசுக்கு, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் பதிவு கட்டணம், விற்பனை வரி, ஆயத்தீர்வை வரி, மத்திய அரசின் மானியம் போன்றவற்றின் வாயிலாக வருவாய் கிடைத்து வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) தமிழகத்திற்கு மொத்த வரி வருவாயாக 64,944.97 கோடி ரூபாய் கிடைத்திருப்பது, மத்திய தணிக்கை துறை அறிக்கையின் தற்காலிக புள்ளிவிவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 63,755.70 கோடியாக இருந்தது. இந்தாண்டில், 1,189.27 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இந்தாண்டில் மத்திய அரசின் மானியமும், வரி பகிர்வும் குறைந்துள்ளது.

இந்த காலத்தில் வரிகள் வாயிலாக மட்டும் 60,061.72 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வரி அல்லாத வருவாயாக 3,172 கோடி ரூபாயும், மத்திய அரசு மானியமாக 1,710 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.

கடந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், வரிகள் வாயிலாக, 56,366.76 கோடி ரூபாய் கிடைத்தது. வரி அல்லாத வருவாயாக 2,895.70 கோடி ரூபாயும், மத்திய அரசு மானியமாக 4,493.23 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.