📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 30, 2026 08:03 AM

 தமிழகம் புதுச்சேரியில் செப்., 3 வரை மழை

 தமிழகம் புதுச்சேரியில் செப்., 3 வரை மழை

சென்னை: வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், செப்., 3 வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தற்போது, தமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளி மண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை முதல், செப்., 3 வரை, வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில், இன்று மாலை, இரவு நேரங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.