Tamil Nadu
August 10, 2026 01:03 AM
தமிழகத்தில் இன்று லேசான மழை பெய்யும்
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று சில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது. வடகடலோர தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
அதனால், இன்றும், நாளையும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
வரும், 14ம் தேதி வரை, இதே நிலை தொடரும். அதேசமயம், 13ம் தேதி வரை, தமிழகத்தின் வட பகுதிகளில், வெப்பநிலை சற்று உயர வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை, இரவு நேரங்களில், நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu