📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 14, 2026 07:33 PM

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை : வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, ஜூலை 14 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 14 மற்றும் 15: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதேபோல், ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூலை 16: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக மழை நீடிக்கும். அதேபோல் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

ஜூலை 17: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

ஜூலை 18 மற்றும் 19: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூலை 20: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் லேசான மழை தொடரும்.

மேலும், ஜூலை 14 முதல் 16 வரை தமிழகத்தில் அதிசய வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிசய வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

அதேநேரம், ஜூலை 14 முதல் 16 வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் (Hot and Humid) காரணமாக வடமேற்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் வெப்பச் சோர்வு நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, ஜூலை 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிசய வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், வெப்பச் சோர்வு நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.