📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 28, 2026 01:30 PM

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதமும், 3 -ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று கவர்னர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னர் தரப்பில் இருந்து பல வழிகாட்டுதல்கள் கொடுத்து வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கு வங்காளம் போன்ற பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில்கூட அந்தந்த மாநில மொழிக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். அதனால் தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3 -ஆவதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.