Tamil Nadu
August 01, 2026 08:30 AM
தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்டு 1-ந் தேதி (இன்று) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பம்
சுய கணக்கெடுப்பு
வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu