📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 24, 2026 10:30 PM

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் நியமனம்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் நியமனம்

தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக சிவஞானம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2010 தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சிவஞானம், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், சிவஞானம் ஐஏஎஸ்-ஸை பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்கு முன்னதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், தேர்தல் சமயத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின் போதும் இணை தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மத்திய அரசு பணியில் இருந்து தமிழ்நாடு பணிக்கு திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் புதிதாக உருவாக்கப்பட்ட நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.