தமிழ்நாடு பட்ஜெட் 2026 :பள்ளி கல்வித்துறைக்கு 44,527 கோடி : முழு விவரம்
தமிழ்நாடு அரசு தங்களது பட்ஜெட் அறிக்கையை இன்று வெளியிட்டு இருக்கின்றனர். இந்த பட்ஜெட் தாக்கல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பல விஷயங்கள் குறித்து அலசி ஆராயப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் 44,527 கோடி ஒதுக்கியிருக்கின்றனர். இதன் மூலம் ஏழை எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருக்கின்றதுகல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் வெற்றி மடிக்கணினி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு புதிய பயணம் புதிய வேகம் திட்டத்தின் படி இலவச சைக்கிள், ஹெல்மெட் ஆகியவை வழங்கப்படுமாம்.நிதி ஒதுக்கீட்டின் பயன்கள்பள்ளி நிறைவு திட்டம் 2,132 கோடி மதிப்பீட்டில் அரசு பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டம்சூப்பர் க்ளீன் கேம்பஸ் அரசு பள்ளிகள் தூய்மையாக இருக்க ,அதனை பராமரிக்க 139 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுபெருந்தலைவர் காமராஜர் சிறப்பு கல்வி ஏழை மாணவர்களுக்கு உலகத்தரத்தில் இலவசமாக தங்கி படிக்கும் வசதிகளை ஏற்படுத்த 125 கோடி நிதிமாணவர்களுக்கான நன்மைகள் மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையை ஊக்குவைக்கவும், பள்ளிக்கு செல்லும் நேரத்தை குறைக்கவும் இரு முக்கியமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒன்று மடிக்கணினி மற்றும் சைக்கிள் வழங்கும் திட்டம். இந்த இரண்டு திட்டங்களும் மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை கொடுத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்உயர்கல்விக்கு கண்டிப்பாக தேவைப்படும் மடிக்கணினியை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க உதவும்அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் பெற்றோர்களுக்கு ஆயிரக்கணக்கில் சேமிக்க உதவும்.இவ்வாறு பள்ளி கல்வித்துறை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் படிப்பை மேன்படுத்த தமிழக அரசு சிறப்பான திட்டங்களை தற்போது கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் கண்டிப்பாக பயனடைவார்கள் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.