📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 05, 2026 05:31 PM

தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழுக்கு முக்கியத்துவம்: இலச்சினையில் இடம்பெற்ற 'ரூ' குறியீடு

தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழுக்கு முக்கியத்துவம்: இலச்சினையில் இடம்பெற்ற 'ரூ' குறியீடு

தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழுக்கு முக்கியத்துவம்: இலச்சினையில் இடம்பெற்ற 'ரூ' குறியீடு

தேசிய சின்னத்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது பிரிவினைவாத மனநிலை என விமர்சித்திருந்தார்.

Published : August 5, 2026 at 10:57 AM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் இலச்சினையில் 'ரூ' என்கிற தமிழ் எழுத்து இடம்பெற்றுள்ளது.

இந்தியா முழுவதுமே ரூபாய் என்ற வார்த்தையை குறிக்க ‘₹’ என்ற குறியீடு கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மத்திய பட்ஜெட் தாக்கலின் போதும், பிற மாநில பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்படும் போதும் அவற்றின் இலச்சினையில் ₹ என்ற குறியீடே பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த குறியீடே இடம்பெற்று வந்தது. குறிப்பாக, கடந்த 2024-25 நிதியாண்டு வரை தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையின் இலச்சினையில் மேற்குறிப்பிட்ட குறியீட்டையே பார்க்க முடிந்தது.

இந்த சூழலில், கடந்த 2025-26-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்தபோது, ‘₹’ என்ற குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' என்ற தமிழ் எழுத்து பயன்படுத்தப்பட்டது.

2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதன்முறையாக இன்று தாக்கல் செய்கிறது.

இந்நிலையில், இந்த பட்ஜெட்டுக்கான இலச்சினையிலும் 'ரூ' என்ற தமிழ் எழுத்தே பொறிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலச்சினையில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த ஆண்டு மஞ்சள், சிவப்பு நிறங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.