தங்கம் விலை சவரனுக்கு காலை ரூ.1,440 குறைவு ; மாலை ரூ.1,280 அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் நேற்று காலை ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில், 1,280 ரூபாய் அதிகரித்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 14,220 ரூபாய்க்கும், சவரன், 1,13,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 180 ரூபாய் குறைந்து, 14,040 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,440 ரூபாய் சரிவடைந்து, 1,12,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 255 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலை தங்கம் கிராமுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 14,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்து, 1,13,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இதையடுத்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு, 160 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் குறைந்திருந்தன.