Business
July 15, 2026 08:35 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,200 ரூபாய்க்கும், சவரன், 1,05,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 13,150 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,05,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 235 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
Business