தங்கம் விலை இன்று 2
தங்கம் விலை இன்று 2-வது முறை சரிவு! நகை ப்ரியர்கள் மகிழ்ச்சி...
ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை சரிவு...நகை ப்ரியர்கள் மகிழ்ச்சி, எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,940-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,520-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தங்கம் விலை சரிந்து நகை ப்ரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம்:
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனையானது. அந்த விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது ஒரு கிராமுக்கு ரூ.90-ம், ஒரு சவரனுக்கு ரூ.720-ம் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களின் விலையைப் பார்க்கும்போது, ஆகஸ்ட் 20-ம் தேதி ஒரு சவரன் ரூ.1,16,800 ஆக இருந்தது. பின்னர் ஆகஸ்ட் 21-ம் தேதி ரூ.1,18,800 ஆகவும், ஆகஸ்ட் 22-ம் தேதி ரூ.1,19,600 ஆகவும் உயர்ந்தது. ஆகஸ்ட் 24-ம் தேதி ரூ.1,20,240 என்ற அளவை எட்டிய தங்கத்தின் விலை, தற்போது ரூ.1,19,520 ஆக குறைந்துள்ளது.
மேலும்,(ஆகஸ்ட் 25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனையானது. நேற்றைய தினம் விலை மாற்றமில்லாமல் முன்தின விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று(ஆகஸ்ட் 27) காலை ஒரு கிராமுக்கு "ரூ.70 குறைந்து ரூ.14,940 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,520-க்கும்" விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் தங்கத்தின் விலை "ஒரு கிராம் ரூ.285 குறைந்து ரூ.14,725-க்கும்", ஒரு சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ. 1,17,800-க்கும்" விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை காலையில் ரூ.560 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,720 குறைந்து இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது நகை ப்ரியராகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை:
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஆகஸ்ட் 25) ஒரு கிராம் வெள்ளி ரூ.265 ஆக இருந்த நிலையில், இன்றும் அதே விலையில் தொடர்கிறது. ஆகஸ்ட் 24-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.275 ஆக இருந்தது. அதிலிருந்து தற்போது ரூ.10 குறைந்த நிலையில் உள்ளது.
ஆகஸ்ட் 20-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.260 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.265 ஆக உள்ளது. இதன்படி, கடந்த ஆறு நாட்களில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இன்றைய விலை நிலவரம் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.