📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 28, 2026 04:04 AM

தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.2,280 சரிவு

தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.2,280 சரிவு

சென்னை: தங்​கத்​தின் விலை நேற்று ஒரே​நாளில் பவுனுக்கு ரூ.2,280 குறைந்​து, ரூ.1 லட்​சத்து 17 ஆயிரத்து 800-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஆக.14-ம் தேதி​யில் இருந்து விலை படிப்​படி​யாக அதி​கரித்​தது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.2,280 குறைந்​து, ரூ.1 லட்​சத்து 17 ஆயிரத்து 800-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.285 குறைந்​து, ரூ.14,725-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் தங்​கம் ரூ.1 லட்​சத்து 28 ஆயிரத்து 512 ஆக இருந்​தது.