📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 01, 2026 03:32 AM

தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 200 உயர்வு

தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 200 உயர்வு

தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 200 உயர்வு

வெள்ளி இன்று ஒரு கிராம் ரூ. 235க்கும், ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Published : July 31, 2026 at 10:36 AM IST

சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ரூ. 1,06,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருப்பதும், அமெரிக்காவின் பத்திர வருவாய் உயர்ந்து வருவதும் தங்கம் விலை ஏற்றம் காணாததற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கம் விலை தற்போதைக்கு உயர வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறிவருகின்றனர். இருப்பினும் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

எனினும், இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவிருக்கிற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவு தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேற்காசிய போருக்கு பிறகு உலக பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவி வருவதால், தங்கம் விலை தற்போதைக்கு பெரிய அளவில் குறையாது என்கின்றனர் நிபுணர்கள்.

கடந்த சில நாட்களாக வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்தாலும், பல்வேறு துறைகளில் வெள்ளியின் தேவை அதிகம் இருப்பதால் அதன் விலையும் வரும் நாட்களில் ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படும் என்கின்றனர்.

நேற்று (ஜூலை 30) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 75 அதிகரித்து ரூ. 13,230க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 25 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 13,255க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து ரூ. 1,05,840க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 200 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,06,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 13,255

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,06,040

வெள்ளி ஒரு கிராம் - ரூ. 235

வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,35,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

வெள்ளி விலை கடந்த நான்கு நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனையாகி வருகிறது. இன்றும் ஒரு கிராம் ரூ. 235க்கும், ஒரு கிலோ ரூ. 2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.