📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 27, 2026 10:33 AM

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 27)

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 27)

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (ஜூலை 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிறப்பு வீடியோ!

தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்