தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்வு
சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 08) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, 13,965ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப ஆபரணத் தங்கத்தின் விலையும் மாற்றங்கள் நிலவுகின்றன. நேற்றைய காலை வர்த்தகத்தில் தங்கத்தின் விலையில் மாற்றம் நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விலை நிலவரத்தில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு சவரன் ரூ. 1,10,000க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 13, 750 ஆக இருந்தது. மாலைநேர வர்த்தகத்தின் போது ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
கிராம் ரூ. 150 அதிகரித்து சவரனுக்கு ரூ. 1200 ஆக உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,200 க்கும், ஒரு கிராம் ரூ.13,900க்கும் விற்பனையானது. ஆனால் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வெள்ளி விலை கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
பிரத்யேக வீடியோ!
வார இறுதி நாளில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்