📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 06, 2026 12:34 PM

தொழில் அதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்து கைதான காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

தொழில் அதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்து கைதான காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொழில் அதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் புகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபரான தங்க வியாபாரி அகில்குமார். இவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து கைது செய்து விடுவதாக பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த புகாரி மிரட்டி உள்ளார். பின்னர், 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டமாக ரூ.40 லட்சம் வரை அவரிடம் பணம் பறித்துள்ளார்.

ஒருகட்டத்தில் மிரட்டல் அதிகரிக்கவே சென்னை காவல் ஆணையரிடம் அகில்குமார் புகார் தெரிவித்தார். இதுகுறித்து யானைகவுனி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதில், மிரட்டி பணம் பறிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல் ஆய்வாளர் புகாரி, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்பை சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆய்வாளர் புகாரியை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.