Tamil Nadu
September 21, 2026 02:03 AM
சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு வழங்குவதை எதிர்க்கிறோம்: வன்னி அரசு பேட்டி
சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு வழங்குவதை எதிர்க்கிறோம்: வன்னி அரசு பேட்டி
வானூர்: சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு வழங்குவதை எதிர்க்கிறோம் என வன்னி அரசு கூறியுள்ளார். வானூர் தாலுகா தைலாபுரம் கிராமத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு வழங்குவதை விடுதலை சிறுத்தைகள் கொள்கை அடிப்படையில் எதிர்க்கிறது. சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதி தனியாருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, என்றார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu